மாங்குடி மருதனார் பிறந்தாளில் தென்காசி ஆட்சியர் மரியாதை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
mangudi maruthanar
mangudi maruthanar

தென்காசி மாவட்டம் ,சங்கப்புலவர்களின் ஒருவரான மாங்குடி மருதனார் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு சங்கரன்கோவில், மாங்குடியில் அமைந்துள்ள மாங்குடி மருதனார் அவர்களது நினைவு தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம் சங்கப்புலவர்களின் ஒருவரான மாங்குடி மருதனார் பிறந்தநாளினை முன்னிட்டு சங்கரன்கோவில், மாங்குடியில் அமைந்துள்ள மாங்குடி மருதனார் நினைவு தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன்., இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி இன்று (29.04.2020) மரியாதை செலுத்தினார்கள்.

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளினை தமிழ் கவிஞர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு தமிழுக்கு சிறப்பு செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29-ஆம் நாளினை தமிழ்கவிஞர்கள் தினமாக கொண்டாட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

மாங்குடி பகுதியிலுள்ள சங்ககால புலவர்களில் தனக்கென்று தனி இடத்தோடு சிறந்து விளங்கியவர் மாங்குடிமருதனார். இவர் இயற்றிய பாடல்கள் சங்க பாடல் தொகுப்பில் 13 பாடல்கள் உள்ளன. தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் தொண்டாற்றிய சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சியை இயற்றியவர் ஆவார். இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற மாங்குடி மருதனாருக்கு 1992 ம் ஆண்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூண் சிறப்போடு திகழ்ந்து வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டதிற்கிணங்க இன்று சங்கப்பபுலவர்களின் ஒருவரான மாங்குடி மருதனார் நினைவுதூண் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், மாங்குடி கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவு தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் சங்கரன்கோவில், கோட்டாட்சியர், . முருகசெல்வி, தமிழ்வளர்ச்சித்துறை, கண்காணிப்பாளர், .செ.கனகலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் .க.இராமசந்திரபிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .கந்தசாமி மற்றும் பாலசுப்பிரமணியன் மற்றும் மாங்குடி மருதனார் தமிழ்மன்றத்தலைவர் .மலைக்கனி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.