இந்த சம்பளம் போதுமா?

சற்றுமுன்
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.

இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரெண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.