சர்வதேச அளவில் உள்ள 180 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) என்ற தனியார் பத்திரிகையாளர்கள் அமைப்பு ஏப்ரல் 25 அன்று வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தில் இந்தியா கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் பின்னுக்குச் சென்றுள்ளது.
இப்பட்டியலில் இரண்டாவது முறையாக நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 139வது இடத்தைப் பெற்றுள்ளது. வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.




