டெங்குகாய்ச்சல் அதிகரித்து வருவதை தடுக்கும் நடவடிக்கையாக சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் அறிவுறையின்படி பல இடங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது கீழப்பாவூரில் அங்கு உள்ள மைதானம், சென்ட்ரல் வங்கி அருகில், கீழப்பாவூர் பஸ் ஸ்டாண்ட் , காந்திசிலை அருகில் என 4 இடங்களில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான கே.ஆர்.பி.பிரபாகரன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார் ,முன்னதாக பேசிய எம்.பி .பிரபாகரன் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேலும் முதல்வரின் உத்தரவின் படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் டெங்கு குறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஊராட்சி பகுதி, பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு ,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் சுகாதாரத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு ,வாரம் தோறும் டெங்கு கசாயம் வழங்கபடுகிறது எனக் கூறினார் முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா வரவேற்றார்,விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ் குமார் ,சித்த மருத்துவ அலுவலர் தமிழ் முதல்வி ,பாசறை செயலாளர் மு.சேர்மபாண்டியன்,தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை ,பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,அட்மா சேர்மன் வி.கே.கணபதி ,வழக்கறிஞர் ராஜன்,மேலவைப் பிரதிநிதி ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

dengu kpr - 2026
ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending