ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

சற்றுமுன்
தென் தமிழகத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று காலை பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர்  6.30 மணிக்கு கோவில் முன்பு திடலில் உள்ள கொடியேற்றப்பட்டது. கொடி மரத்திற்கு பால், தயிர் சந்தனம், மஞ்சள், இளநீர் போன்ற அபிசேப்பொருட்களால் அபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியல்  சுற்று வட்டார பகதிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் விழா  7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. காலை மாலையும் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக வெகு விமாரிசையாக நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர்கலந்து கொள்வர். அதனை தொடர்ந்து சப்தாவர்னம் நிகழ்ச்சி வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.