
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அடிப்படையான ஜாவா டெக்னாலஜியை ஆரக்கிள் நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் என்ற நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கி உரிமைப்படுத்தியது. இந்த நிலையில் கூகுள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு டால்விக் என்ற மென்மொருள் ஆரக்கிளின் ஜாவாவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் இதனால் கூகுள் நிறுஅனம் சுமார் 42 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாகவும் ஆரக்கிள் குற்றஞ்சாட்டியது
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த தீர்ப்பு கூகுளுக்கு ஆதரவாக வந்தது. ஆனால் ஆரக்கிள் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் ஆரக்கிளுக்கு சாதகமான தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த தீர்ப்பில் தீர்ப்பில் கூகுள் நிறுவனம் காப்புரிமை மீறியுள்ளதாகவும், இதற்காக அந்நிறுவனம் எவ்வளவு நஷ்டஈடு வழங்கலாம் என்பது குறித்து கீழ் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 9 பில்லியன் டாலர் வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படு கூகுள் நிறுவனத்திற்கு இதுவொரு பின்னடைவு என்றே கூறப்படுகிறது



