சைனா என்ஜினை தடைசெய்ய வலியுறுத்தி சென்னை துறைமுக வளாகத்தில் மீனவர்கள் ஆர்பாட்டம்!

Published:

சென்னை இராயபுரம் ஒட்டிள்ள துறைமுக கடற்கரை மீன்பிடி வளாகத்தில் விசை படகு, மற்றும்  நாட்டு படகு  உரிமையாளர்கள் சைனா  என்ஜினை முற்றிலும் தடைசெய்ய வலியுறுத்தி விசை படகு உரிமையாளர்கள் சங்கம்  சார்பில்  கடற்கரையில்  ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகுகள் உரிமையாளர்கள் கடற்கரை  மீன்பிடி முகதுவார பகுதியில்  படகுகள் செல்லாதவாரு நாட்டு படகுகளை வழிமறித்து 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். 
விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் இதுசம்பந்தமாக  கருத்து தெரிவித்த போது..
சைனா என்ஜினை விசைப்படகில் பொருத்துவதால் ஏற்படும் இழப்பு மற்றும் பாதிப்பு குறித்து  தமிழக அரசுக்கு  பலமுறை எங்கள் தரப்பில் கோரிக்கைகள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 
கேரளாவில் சைனா என்ஜினை முற்றிலும் தடைசெய்யப்பட்டு விட்டது. 
தமிழக அரசின் மீன்வளத்துறைக்கு விடுத்த எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்டமாக மீன்வளத்துறை அலுவலகத்தை விரைவில் முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர். 
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img