மெர்சல் விஜய்கு… இது ஒரு டாக்டரால் எழுதப்பட்டது

சற்றுமுன்
மெர்சல் விஜய்கு….
மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து மக்கள் பக்கம் நிற்கும் காட்சிகளிலே எம் ஜி ஆர் நிறைய நடித்தார்.அது அவர் அரசியல் வாழ்க்கைக்கு மிகுந்த கை கொடுத்தது.அவரும் நாட்டை ஆண்டார்.மக்கள் ஆதரித்தனர்.மக்கள் தலைவராக அவர் இருந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை.அவரை போலவே வசனம் பேசியே நாட்டை பிடிக்க நீங்களும் பார்க்குறீங்க.
ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல.விழித்துகொண்டனர்.
உங்க அடுக்கு மொழி வசனம் இங்க இனி எடுபடாது.
5ரூபாய்னு ஏன் சொல்றீங்க??இலவசமா தனியார் மருத்துவமனை நடத்து என்று கூட சொல்லுங்க.ஏனெனில் நீங்களா நடத்த போறீங்க?நீங்க அடுக்கு மாடி கட்டடங்கள்,வணிக வளாகம் என கட்டுவீங்க.மருத்துவமனை இன்னும் கட்டல தானே!
அரசு மருத்துவமனைகள் இங்கே இலவசமாக இயங்கி கொண்டிருப்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை விஜய்.ஏனெனில் படக்காட்சிகளுக்கு வேண்டுமானால் அரசு மருத்துவமனை பக்கம் நீங்கள் வந்திருக்கலாம்,மருத்துவ சிகிச்சைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் எங்க அருமை பெருமைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எங்க அருமை பெருமையெல்லாம் சாமானியர்களுக்கு தான் தெரியும்.படத்தில் மட்டும் சாமானிய வேசம் போடும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வசனம் எல்லாம் ஓசில பேசுனீங்களா அல்லது 5ரூபாய் வாங்கி கொண்டு பேசுனீங்களா விஜய்?
உங்க மெர்சல் படம் ஓசில திரையரங்குகளில் வெளியிடுகிறார்களா அல்லது 5ரூபாய் வாங்கி கொண்டு டிக்கட் கொடுக்கிறார்களா விஜய்?
இந்த பட வெளியீடு தள்ளிப்போய்விடுமோ,தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் போய்விடுமோ அதனால் நம் லாபம் போய்விடுமோ என முதல் அமைச்சரை காண முன் வாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வேக வேகமா போனீங்களே விஜய்….
வேறு எந்த சமூக நீதி வேண்டியாவது இப்படி அவசர அவசரமா முதல் அமைச்சரை காண ஓடிருப்பீங்களா?
மற்றவர்களுக்கு உபதேசம் சொல்வதை நிறுத்திவிட்டு மாற்றத்தை முதலில் உங்களிடமே தொடங்குங்கள்.
மருத்துவர். ஒருவரின் பதிவு
19/10/17
ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.