முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சற்றுமுன்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாகொடியேற்றத்துடன் துவங்கியது

திருநெல்வேலி மாவட்டம்தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்  வென்னி மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடி யேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், இரவு 7 மணிக்கு தீபாரா தனையும் 
25-ந்தேதி வரை தினமும் மதியம் 12 மணிக்கு அபிஷேகம், உச்சிகால பூஜையும், மாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 10 மணிக்கு சஷ்டி ஹோமம், மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 26-ந்தேதி காலை 10 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு காட்சி அருளல், இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடை பெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.