அறந்தாங்கி அருகே தேனாத்திவயல் கிராமத்தில் மின்னல் தாக்கி விவசாயி பலி

Published:

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை அடுத்த தேனாத்திவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
அறந்தாங்கி அருகே தேனாத்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் இவரது மகன் முத்து(42) இவர் மாலை நேரத்தில்  தேனாத்திவயல் கிராமத்தினை சேர்ந்த சாம்பல்ஏரியில் மாடு மேய்த்துகொண்டிருந்தார் அப்போது பலத்த மழை பெய்தபோது அப்போது கடும் மின்னல் தாக்கியது இதில் மின்னல் தாக்கிய மயக்கமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே இறந்தார் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளது இது குறித்து ஏம்பல் போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்துவிசாரணை நடத்திவருகிறார்.  

Related articles

Recent articles

spot_img