கள்ளழகர் நூபுர கங்கை திருமஞ்சனம்! கண்குளிரக் காணுங்கள்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை
noopuragangai
noopuragangai

இன்று கள்ளழகர் நூபுர கங்கை திருமஞ்சனம்…

தினமும் குளியலறையில் குளிக்கும் நாமெல்லாம் வருடத்திற்கு ஒரு முறையாவது குற்றாலம் போன்ற அருவிக்கு சென்று மேலே இருந்து கொட்டும் நீரில் குளிக்க விரும்புவோம் அல்லவா….?

அதை போல் ஒரு பெருமாளும் வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியில் சென்று நீராடுகிறார்…

யார் அவர்…சித்திரை திருவிழா நாயகன்…நம் மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தான்….

kallalagar-noopura-gangai-manjanam
kallalagar-noopura-gangai-manjanam

ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி அன்று நண்பகல் கள்ளழகர் உற்சவர் , அழகர் மலை மீது உள்ள…நூபுர கங்கை என்றும் சிலம்பாறு என்றும் அழைக்கப்படும்…தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்….அங்கு தைலக்காப்பு நடைபெறும்…

kallalagar-noopura-gangai
kallalagar-noopura-gangai

பின் அங்கு சிறு அருவி போல் கொட்டும் நீரிற்கு கீழ் அப்படியே நின்று ஆனந்தமாய் திருமஞ்சனம் காண்பார்….

இது கள்ளழகருக்கு மட்டுமே உரிய சிறப்பு எனலாம்….

kallagar-noopura-gangani
kallagar-noopura-gangani

நூபுர கங்கை அருவியில் ஆனந்தமாய் நீராடும் அழகன் நம் மனதிற்கும் ஆனந்தம் தரட்டும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.