நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வர உள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னை வர உள்ளனர். தேர்தல் தொடர்பாக இன்றும், நாளையும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும், அரசியல் கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.




