திமுக., என்றாலே தில்லு முல்லு கட்சி…தான்! துரைமுருகனை ஒரு பிடி பிடித்து… அடித்துக் கூறும் பிரேமலதா!

அடடே... அப்படியா? சற்றுமுன்

premalatha - 2026

திமுக., என்றாலே தில்லு முல்லு கட்சி…தான் இதை.. அடித்துச் சொல்லுவேன் என்று பிரேமலதா ஆவேசமாகக் கூறினார்.

திமுக.,வின் துரைமுருகன் மற்றும் தேமுதிக.,வினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, தேமுதிக., குறித்து திமுக.,வினர் பரப்பும் அவதூறுகள் பற்றி  விளக்கம் அளித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது அவர் காரசாரமாகப் பேசியதாவது…

தேமுதிக.,வை பழிவாங்குகிறது திமுக.,! கருணாநிதியை சந்திக்க அனுமதி தரவில்லை ஸ்டாலின்!

திமுக., அரசியல் ரீதியாக பழிவாங்குகிறது! அன்று விஜயகாந்தை சந்திக்க வந்த போது, ஸ்டாலின் உடல் நிலை மட்டும் விசாரிக்க வந்ததாக அவர்கள் சொன்னார்கள். ஆனால், நானோ, இரு தலைவர்கள் சந்திக்கும் போதும் அரசியல் பேசுவது சகஜம் என்று சொன்னேன்.

பிரேமலதா சொன்னதை நன்றாக கவனியுங்கள். அவர்கள் கூட்டணி பேசினார்கள் என்று நான் சொல்லவில்லை, அரசியல் பேசினார்கள் என்றுதான் சொன்னேன். வார்த்தையை தேர்ந்தெடுத்துப் பேசுவது எங்கள் வழக்கம்.

எது நாகரிகம், அநாகரிகம்.. என்பதை நீங்களே பேசுங்க.. வந்தார், அரசியலும் பேசினார் என்றுதான் சொன்னேன்

ஸ்டாலினுக்கு நான் பதில் சொல்கிறேன்! துரைமுருகன் பேசினது முற்றிலும் உளறல்!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்வார்களா என்பதை துரைமுருகனைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்…

தலைவர் தூங்கிக்கிட்டிருக்காரு தலைவர் தூங்றார் என்று துரைமுருகன் ஸ்டாலினையே கேவலப் படுத்துகிறார்! துரைமுருகன் மதியம் ஒரு மணிக்கு உக்காந்த இடத்தில் தூங்குவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்!  தூக்கத்தில் பேசினார் என்று நினைக்கிறேன்!

தெரியாத ஆள் என்றால் வீட்டுக்குள் விட்டுடுவாரா! முதல்நாள் இருவரையும் குறித்து சொல்கிறார். மறுநாள் இவர்கள் யாரென்றே தெரியாது என்கிறார் துரைமுருகன்.

எம்ஜிஆர் அன்றே பதியவைத்தார்… திமுக., என்றாலே திருட்டுக் கட்சி என்றார்
கணக்கு கேட்டதால் தூக்கி எறிந்தார்கள் என்பதை பதிய வைத்தார். அது இன்றளவும் திமுக., குறித்த மக்களின் மனதில் இருக்கிறது. அதை மாற்ற முடியாது.

நியாயத்தை நேர்மையை தர்மத்தை தொலைத்த தில்லு முல்லு கட்சி திமுக., அவர்களின் அணுகுமுறை கண்டிக்கக் கூடியது அவமானம் தரத்தக்கது என்று பதிலளித்தார் பிரேமலதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.