ஒருவழியாக உறுதியான வெற்றிமாறன் படம் – அந்த நடிகரைத்தான் இயக்குகிறாராம்!..

சினி நியூஸ்

vetrimaran

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.

எனவே, அவர் யாரை அடுத்து இயக்கப்போகிறார் என்கிற குழப்பம் நிலவி வந்தது. தற்போது அந்த குழப்பம் முடிவிற்கு வந்துள்ளது. அவர் சூரியை இயக்குவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சத்தியமங்கலத்தில் கடம்பூர் என்கிற பகுதியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கேயே முழு திரைப்படத்தையும் முடித்துவிட வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.