அட தீபாவளி ஸ்விட் நியூஸ்.. தல 62 அப்டேட்!

Published:

ajith 1 1
ajith 1 1

மாஸ் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அஜித். தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது.

படத்தின் டீசரை அடுத்தகட்டமாக வெளியிடுவதற்கான வேலைகளை படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் பைக் ட்ரிப் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலானது.

அஜித் தன்னுடைய 61 வது படத்தை இயக்குநர் வினோத்திற்கே கொடுத்திருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. அதனை ஹச்.வினோத்தும் உறுதிப்படுத்தினார். படத்தை வலிமை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கவுள்ளார்

எனக்கு வினோத்துடன் வேலை செய்வது வசதியாக இருக்கிறது என அஜித் கூறியதாகவும் செய்திகள் வெளியானதை பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாகவே அஜித் சில இயக்குநர்களை நேரில் சந்தித்து கதை கேட்டு வருகிறாராம்.அதுல ஒன்னை ஓக்கே பண்ணிட்டாராம் .

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஆனா இது தலயோட 62 வது படத்துக்காம்.. இப்போ சுட சுட வெளியாகியிருக்கிற அப்டேட் என்னவென்றால் ,அஜித் தன்னிடம் கதை சொல்லிய தியாகராஜன் குமாரராஜாவிடம் மீண்டும் கதை விரிவாக்கத்தை மீண்டும் கேட்டிருக்கிறாராம்.

அவரின் கதை அஜித்திற்கு பிடித்து போகவே பச்சை கொடி அசைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

thiyagarajan kumara raja
thiyagarajan kumara raja

அஜித்தின் 62 வது படத்திற்கு தியாகராஜன் குமாரராஜாவோடு கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா முன்னதாக ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதன் பிறகு சூப்பர் டியூலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார். தியாகராஜன் குமாரராஜாவுக்கு அஜித்துடன் இணைந்து வேலை செய்வது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் , திரைக்கதைக்கு உதவியாக இருந்துள்ளார்.

அஜித்தின் 62 வது படத்தின் அப்டேட்டே அவரது ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்தான் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img