வைகை ஆற்றில் வெள்ள அபாயம்! மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai-vaigai-river-flood
madurai-vaigai-river-flood

வைகை அணையில் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையை மதுரை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் எந்நேரமும் அணை நிரம்பி வழியும் என்பதால் மதுரை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பேரிடர் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியர், மதுரை வடக்கு மதுரை தெற்கு மதுரை கிழக்கு மத்திய மேற்கு வாடிப்பட்டி வட்டாட்சியர் களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.