
தமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெண்டில்மேன் என பட்டம் வாங்கிய சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் நடிக்க தெரியாமல் சொதப்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
சொந்த வாழ்வில் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு தியா, தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். பாசக்கார கணவர் மற்றும் தந்தையாக வாழ்ந்து வருபவர்.
இந்நிலையில், சூர்யா தனது கையில் ஜோதிகா, தியா, தேவ் என மூன்று பேரின் பெயர்களையும் பச்சை குத்தியிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட சூர்யா ரசிகர்கள் ‘இவ்வளவு பாசக்காரரா சூர்யா’ என ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர். அதேநேரம் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.



