சரித்திர உண்மை என்று பேசி தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் கமல்: சீறுகிறார் ராஜேந்திர பாலாஜி

Published:

rajendra balaji admk minister - 2026

’கமல் ஒரு கத்துக்குட்டி! அவரால் கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாது! சரித்திர உண்மை என்று கூறி, தரித்திரத்தை விலைகு வாங்குகிறார் கமல் என்று சீறினார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

இந்து தீவிரவாதம் என்றும், கோட்சே ஒரு தீவிரவாதி என்றும் கூறி, இந்திய அளவில் பலத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டார் நடிகர் கமல்ஹாசன். அவரது கருத்துக்கு பிரதமர் மோடிகூட பதிலடி கொடுத்துள்ளார். இந்த அளவுக்கு சர்ச்சையை உருவாக்கிய பேச்சுக்கு, கமல் வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக, தாம் பேசியது சரி என்றும், தவறாக அர்த்தம் கொள்ளப் பட்டது என்றும், தாம் பேசுவது வரலாற்று உண்மை என்றும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறி, எரிகிற தீக்கு எண்ணெய் விட்டுள்ளார் கமல்.

kamalhaasan aravakurichi - 2026

இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘சரித்திர உண்மை, சரித்திர உண்மை’ என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறுவது சரித்திர உண்மையா?

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

அதற்கு முன்பெல்லாம் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் நிறைய உண்டு. அதற்குள் நாம் போக வேண்டாம். அந்த சம்பவங்கள் கசப்பான, மறைக்கப்பட வேண்டிய மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதை நாம் மீண்டும் பேசினால் மதநல்லிணக்கத்திற்கு கேடு விளையும்.

அந்தச் சம்பவங்களுக்குள் ஒரு சாதாரண மனிதனே போகக் கூடாது எனும் போது ஒரு நடிகர் இவ்வாறு பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது! விஸ்வரூபம் படம் வெளிவந்த போது இஸ்லாமியர்களை எப்படி பயங்கரவாதிகளாகச் சித்திரித்து காண்பித்தார் என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள்!rajendra - 2026

சிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக கமல் இப்படி தொடர்ந்து பேசி வருகிறார்!

அதிமுக.,வினரை வேஷ்டி கசங்காமல் வீட்டுக்கு அனுப்புவேன் என்று கமல் கூறுகிறார்! ராஜதந்திரி என பெயரெடுத்த கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி போய்விடும் என்று கூறினார்! ஆனால் எடப்பாடி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது!

கமல் ஒரு கத்துக்குட்டி. ஒரு கருத்தைக் கூறி விட்டால் பெரிய ஆள் ஆகி விட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்தத் தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம்!

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள்! எடப்பாடியின் ஏழைகளுக்கான ஆட்சி தொடர்ந்து செயல்படும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Related articles

Recent articles

spot_img