கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி

இந்தியா சற்றுமுன் வணிகம்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. 8.95% என இருந்த வட்டி விகிதம், இனி 8.65% ஆக குறைகிறது. இந்த வட்டிக்குறைப்பு விகிதம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் இந்த வட்டிக் குறைப்பு அமலாவதம் மூலம் பலர் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம். மேலும், வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவர் என்று எஸ்பிஐ வங்கி எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து வங்கியின் ஒரு பிரிவு நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா தெரிவிக்கையில், வங்கியின் இந்த நடவடிக்கையால் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவர். வட்டிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு விடுத்த அழைப்பின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வாகனக் கடனுக்கும் வட்டி விகிதம் விரைவில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் எஸ்.பி.ஐ வங்கியில்தான் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.