பெண்குழந்தை பிறந்ததால்.. வாயில் விரல் விட்டு கொன்ற தந்தை!

இந்தியா கிரைம் நியூஸ்
baby 1

ஆண் குழந்தை பிறக்கலையாம். அதனால் பிறந்துவிட்ட பச்சிளம் பெண் குழந்தையின் வாயினுள் விரலைவிட்டு, கொன்ற கொடூரம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. லாக்டவுன் என்றாலும்கூட இந்த வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கைகளும், கொடூரங்களும் நடந்த படியே உள்ளன.

பெரும்பாலும், படிப்பறிவில்லாத கிராமங்களில்தான் இந்த அக்கிரமம் நடக்கிறது. மேலும் பழமையிலும், மூடநம்பிக்கையிலும் பின்தங்கிவிட்டதால், பெண் குழந்தைகள், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கவே செய்து வருகின்றன.

அப்படி ஒரு சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.. மண்டி மாவட்டத்தில் நாஸ்லோ என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்த தம்பதி ஹரிஷ் குமார் – மீனாதேவி. மீனாதேவிக்கு 27 வயசாகிறது.

கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகிறது. 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இந்த தம்பதிக்கு இருக்கிறார்கள். ஆனால், கல்யாணம் ஆன நாளில் இருந்து ஹரிஷ்குமார் மீனாவை கொடுமைப்படுத்தியபடியே வந்திருக்கிறார். சண்டை வரும்போதெல்லாம் அவரை சரமாரி அடித்து மிருகம்போல நடந்து கொள்வாராம்.

2 குழந்தைகளுக்காக அனைத்தையும் மீனா பொறுத்து போயுள்ளார். இந்த நிலையில், மீனாவுக்கு கடந்த புதன்கிழமை மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.. ஆனால் ஹரிஷ்-க்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சொல்லி கொண்டே இருந்தாராம்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தவர், மறுபடியும் பெண் குழந்தை பிறந்துவிட்டது என்று கேட்டதுமே டென்ஷன் ஆகிவிட்டார்.

அதனால் நேராக மீனாவிடம் சென்று, பக்கத்தில் படுத்து கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை எடுத்து, தலைகீழாக தொங்கவிட்டு அந்த குழந்தையின் வாயினுள் விரலையும் விட்டு கொலையும் செய்துள்ளார்.

அதற்கு பிறகு அந்த குழந்தையை அவரே வெளியே தூக்கி சென்று விட்டு, கொஞ்ச நேரத்தில் மீனாவிடம் வந்து, “அந்த குழந்தையை அடக்கம் செய்துட்டேன்” என்றாராம்.

இதை கேட்ட அதிர்ந்த மீனா, கணவன் மீது போலீசில் புகார் தந்துள்ளார். இதையடுத்து ஹரிஷை போலீசார் கொத்தாக தூக்கி சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.