Tv பார்க்க 5 சிறுமிகளை வீட்டிற்குள் அழைத்து.. பாலியல் வன்கொடுமை! 65 முதியவர் கைது!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai

சட்டீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பலோட் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர மீனா கூறியிருப்பது,

முதற்கட்ட விசாரணையின்படி, அர்ஜுண்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தில் 65 வயதான முதியவர் வாழ்ந்து வருகிறார். அவர் வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 முதல் 11 வயதுக்குள்பட்ட ஐந்து சிறுமிகளை தனது வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க அழைத்துள்ளார்.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக தனி அறைக்குள் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒரு குழந்தை சோர்வாக விளையாட முடியாமல் அமர்ந்திருப்பதை கண்ட தாயார் குழந்தையிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் மற்ற நான்கு சிறுமிகளிடமும் விசாரித்த போது அனைவரையும் பாலியல் கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெற்றோர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் இவரை கைது செய்துள்ளோம். குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.