ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ் போடுகிறார் எச். ராஜா!

Published:

தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண், ஆனால் இங்கு ஆன்மீக அரசியல், சபாஷ் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பாஜகவினர் உள்பட அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக.,வினர் வரவேற்பு தெரிவிப்பதாலேயே, சீமான் உள்ளிட்ட சிலர் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

ஆயினும், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி விமர்சனம் வெளியிட்டிருந்தார். ஆனால், ரஜினி அரசியல் வருகை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த எச். ராஜா, ரஜினியின் ஆன்மீக அரசியலை சுட்டிக்காட்டி ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பாராட்டு தெரிவித்திருந்த அவர், தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த மண். இடைப்பட்ட காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து. ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது என்று கூறி இருந்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்நிலையில் இன்று அவர் இட்ட பதிவில், “இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண் என்று கூறியுள்ளார்.

மேலும், “அடியே மீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண். ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img