December 5, 2025, 5:10 PM
27.9 C
Chennai

திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

02-01-2018 இன்று திருவாதிரை திருநாள்..

‘திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பார்கள். அன்று ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்வார்கள். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இந்த திருவாதிரை நாளன்று ஒரு வாய் களி தின்றால் அதன் பலன் அளவிடற்கரியது என்கிறது புராணம். திருவாதிரை விரதம் இருப்பவர்கள், களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரை தரிசித்து வருவது சிறப்பு.
மார்கழி திருவாதிரை நாளில்… ஸ்ரீதாணுமாலயனைத் தரிசிப்பது மகா புண்ணியம். குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து தெற்கே ஆறு கி.மீ தொலைவில் கன்யாகுமரி செல்லும் பாதையில் உள்ளது சுசீந்திரம். சிவன்,- பிரம்மா,- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் தலம்.
திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஒருமுறை முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகிய மூவரும் அனுசூயாவின் கற்பின் மகிமையைச் சோதிக்க அத்திரி முனிவரின் குடிலுக்கு தவசிகளாக வந்தனர். அவர்களை உபசரித்து விருந்தளிக்க முற்பட்ட அனுசூயாவிடம், அவர்கள், ‘‘குழந்தை இல்லா வீட்டில் உணவு ஏற்க மாட்டோம்!’’ என்று கூறினர். சற்றுத் திகைத்த அனுசூயா, பின்னர் மனதில் தன் கணவரை தியானித்து மூவரையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களுக்கு ஒரு தாயாக அமுதூட்டினாள்.
அனுசூயாவின் கற்பின் மேன்மையை அறிந்த முப்பெருந்தேவியரும் தங்கள் கணவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டினர். அனுசூயா அவர்களிடம், ‘‘உங்கள் நாயகர்களை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள். அதன்படியே அந்தக் குழந்தைகளை மூன்று தேவியரும் எடுத்து அணைத்துக் கொண்டனர். அப்போது ஒரு தவறு நிகழ்ந்தது. குழந்தைகளைச் சரியாக அடையாளம் தெரியாமல் தேவியர்கள் மாற்றி எடுத்தனர். இதனால் தேவதேவியரின் பெருமை குன்றியது. தங்களின் தவறுக்குக் கிடைத்த தண்டனை இது என மூவரும் கலங்கினர்.
அனுசூயா தன் கணவரின் பாத தீர்த்தத்தை அந்த குழந்தைகளின் மேல் தெளிக்க… அந்த மூன்று குழந்தைகளும் தங்கள் பழைய உருவத்தை அடைந்தனர். இந்த மயக்க நிலையில் ஏற்பட்ட தூய்மைக் குறைவு நீங்க… அந்தத் தலத்தில் உள்ள தீர்த்தம் அருகே ஹோம அக்னி வளர்த்து, மூன்று தேவியரும் நெருப்பில் இறங்கித் தம்மைப் புனிதப்படுத்திக் கொண்டனர். அது ஒரு திருவாதிரை நாளன்று நிகழ்ந்தது என்கிறது ஸ்தல புராணம்.
தேவர்களும் முனிவர்களும் தேவியருடன் கூடிய மும்மூர்த்திகளை அங்கு ஒருங்கே தரிசித்து மகிழ்ந்தனர். தேவர்கள் மறைந்ததும் அவ்விடம் இருந்த கொன்றை மரத்தடியில் மூன்று லிங்கங்கள் எழும்பின. தாணு (சிவன்), மால் (விஷ்ணு), ஐயன் (பிரம்மா) இணைந்த தாணுமாலயனாக அந்தத் தலத்தில் எழுந்தருளினார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சுசீந்திரத்தில் திருவாதிரை தினம் சுமங்கலிப் பெண்களுக்கு உகந்த நாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
கோயிலின் திருவிழாக்களில் மார்கழித் திருவாதிரையும் ஒன்பதாம் நாள் தேரோட்டமும் மிகவும் பிரபலமானவை. பத்து நாட்கள் இங்கு நடைபெறும் விழாவில் ஒன்பதாம் நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடித் தேர் இழுப்பது கண்கொள்ளாக் காட்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories