மனதை மயக்கும் மாம்பழ லட்டு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mango-lattu
mango-lattu

மாம்பழ லட்டு
தேவையான பொருட்கள்
மாம்பழம் – 1 ( மிக்சியில் அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும் )

காய்ச்சிய பால் – 1/4 கப்

சர்க்கரை – 1/4 கப்

மில்க் பவுடர் – 1/2 கப்

நெய் – 2 டீ ஸ்பூன்

முந்திரி பாதாம் பவுடர் – 1/2 கப்

செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும். பின் காய்ச்சிய பாலை ஊற்றவும். பால் கொதித்தவுடன் அரைத்து வைத்த மாம்பழ விழுதை சேர்க்கவும்.

பின் நன்கு கிளறவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறவும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு பால் பவுடரை சேர்த்து கட்டியாகிவிடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கவும். திரண்டு வரும்பொழுது முந்திரி பாதாம் பவுடரை சேர்த்து இறக்கி வைக்கவும். சூடு ஆறிய பிறகு வேண்டிய சைஸில் லட்டுகளாக பிடித்துக் கொள்ளவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.