சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

Published:

vijayawada solar energy
vijayawada solar energy

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்திற்காக ஏற்பாடு செய்யும் சூரிய பலகைகளின் மீது 40 சதவிகிதம் தள்ளுபடி அளிக்க உள்ளது. நகரிலுள்ள வணிக வளாகங்களுக்கும் சூரிய பலகைகள் ஏற்பாடு செய்து கொள்ள சலுகை அளிக்கப் போகிறது.

இது வெற்றிகரமாக நடந்தேறினால் படிப்படியாக மீதி உள்ள நகரங்களுக்கும் விஸ்தரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நகரத்தில் இரண்டு மூன்று கிலோ வாட்கள் பயன்படுத்தும் கனெக்ஷன்கள் அதிகமாக உள்ளன. ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய பலகைகளின் ஏற்பாடுகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதன்படி ரூபாய் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை செலவு செய்தால் வீட்டுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கிறது. இதில் 40 சதவீதத்தை மத்திய அரசு தள்ளுபடியாக கொடுக்கிறது. அதாவது கிலோ வாட்டுக்கு 16 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
solar energy
solar energy

தற்போது வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு இத்திட்டம் அமுலில் உள்ளது. சூரிய சக்தி நகர ப்ராஜெக்டில் ஒரு பகுதியாக வணிக வளாகங்களுக்கும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. வணிக வளாகங்களுக்கு எத்தனை தள்ளுபடி அளிக்க வேண்டும் என்பது பற்றி இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

பயன்பாட்டாளர்களுக்கு தரமான குறைந்த விலை மின்சாரம் கிடைக்கும்படி ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தி வருவதாக மாநில மின்சாரத்துறை ஞாயிறன்று ஒரு அறிவிப்பில் தெரிவித்தது. இதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் இலக்கு, தேவையான நிதி தொடர்பாக ஒரு திட்டத்தை தயாரித்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img