spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுகாய்ச்சல் சளி இருமல் நீங்க இந்த கஷாயம் குடிங்க!

காய்ச்சல் சளி இருமல் நீங்க இந்த கஷாயம் குடிங்க!

- Advertisement -
notchi

நொச்சி இலை
நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.

நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இவை உடல் அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும். மாதவிலக்கை தூண்டும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.\

ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு, நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.

நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும்.

ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வேது பிடிக்க மண்டை நீரேற்றம் கட்டுப்படும்.

நொச்சி இலை தாவரத்தில் கருநொச்சி, நீலநொச்சி என இரண்டு வகை உண்டு. நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமானவை. மேலும் நொச்சியின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.

கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்குச் செய்யப்பபடும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாகச் சேர்க்கப்படுகின்றது.

உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும்.

மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. அதுமட்டுமல்ல கொசு விரட்டுவதில் முக்கியப் பங்கு இந்த நொச்சிக்கு உண்டு.

கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போடும் பழக்கம் கிராம மருத்துவத்தில் உள்ளது

மிளகு, பூண்டு உடன் சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைகளைத் தேய்த்து வந்தால், அவை மறையும்.

நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளித்தால், பிரசவித்த தாய்மார்களுக்கு அசதி குறையும். நரம்புகளை வலுப்படுத்தவும் இந்த மூலிகை செடி உதவுகிறது.

காய்ந்த நொச்சி, சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. உடம்பில் நீர்க்கோர்வைகளை போக்கவும், மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் இது உதவுகிறது.

வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் ஒவ்வாமை, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றை போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது. எனவே, நொச்சி இலை மனிதர்களின் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் எளிய மூலிகை. இந்த மூலிகைச் செடி வீட்டுத் தோட்டங்களிலும், மாடித் தோட்டங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று.

ஒரு தேக்கரண்டி, நொச்சி இலை சாறில், ஒரு கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். மேலும் நொச்சி, உத்தாமணி இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடம் கொடுக்க வேண்டும். நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும்.

நொச்சி இலையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம். நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம் குணமாகும்.

நொச்சி இலையை, அரிசிக் கஞ்சியில் அரைத்து புண்களைக் குணமாக்க உபயோகிக்கலாம். பொதுவாக, நொச்சி இலைச் சாறு கொண்டு புண்களை கழுவி மருந்திடலாம். நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பைமேனி, ஆடாதோடை, நாயுருவி ஆகியவற்றை, வகைக்கு ஒரு பிடி வாயகன்ற மண் பாத்திரத்தில் இட்டு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில், பொறுக்கும் சூட்டில் ஆவி பிடிக்க வாதநோய்கள், தலைவலி போன்றவை குணமாகும்.

புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர்.

காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

nothci

குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு மலர் பயன்படுத்தப்படுகிறது.

கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது

காய்ச்சலின் போது நொச்சி இலையில் ஆவி பிடித்து வருவதன் மூலம் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். நொச்சி இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாக காயவைத்து அந்த நீரில் குளித்து வர காய்ச்சலின் போது ஏற்பட்ட உடல் வலி நீங்கும்.

ஆஸ்துமா பிரச்சினைக்கு மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை நொச்சி இலையுடன் சேர்த்து விழுது போல் அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை குணமாகும்.

தலைவலி நொச்சி இலையுடன் சிறிதளவு சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்து அந்தப் பற்றினை நெற்றி, கண்ணம், காதின் பின்பகுதி இவைகளில் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.

வீக்கம் நீங்க உடல்வலி, உடலில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நொச்சி இலையை வாணலியில் போட்டு வதக்கி ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, வெதுவெதுப்பான சூட்டில் எங்கெல்லாம் வலி வீக்கம் இருக்கிறதோ அங்கு ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கழுத்து வலி நீங்க நொச்சி இலைச் சாற்றுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து கை பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து குளித்தால் கழுத்து வலி, கழுத்தில் நெறி கட்டுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். நரம்பு பிரச்சனையால் சில பேருக்கு கழுத்து வலி இருந்து வரும். அந்த பிரச்சினைக்கும் இது தீர்வாக இருக்கும்.

கொசு விரட்டி நொச்சி இலைகளை தீ மூட்டி அதில் வரும் புகையினால் கொசுக்கள் விரட்டபடுகிறது. எந்தப் பக்கவிளைவும் இல்லாத கொசு விரட்டியாக இது நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. நொச்சி இலைகளை படுக்கும் இடத்தில் ஒரு தட்டில் போட்டு வைத்திருந்தாலே கொசுக்கள் உள்ளே வராது. வீட்டைச் சுற்றி இடம் உள்ளவர்கள் நொச்சி செடியை வளர்த்து வந்தால் பூச்சி பொட்டுகள் அண்டாமல் இருக்கும். நம் வீட்டு வாசலில் நொச்சிச் செடிகள் இருந்தால் நம் வீட்டிற்குள் வரும் தூசியினை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

தானியங்களை பாதுகாக்க நம் வீட்டில் தானிய வகைகள், பருப்பு வகைகள், அரிசி இவைகளை சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் இந்த நொச்சி இலைகளை போட்டு வைத்தால் புழு, வண்டு இவைகள் வராமல் இருக்கும். இவைகள் மட்டுமல்லாமல் இந்த நொச்சிசெடி நம் ஊர்களில் இருக்கும் ஏரிகளின் கரையோரத்தில் வளர்த்து வந்தால், கரையானது உடையாமல் வலுவாக இருக்கும். மலைச்சரிவுகளில் தானாக வளரும் இந்த நொச்சிசெடி மண் அரிப்பைத் தடுக்கிறது. அதிவேகமாக வீசப்படும் காற்றை தடுக்கும் சக்தியும் இந்த நொச்சிச் செடிக்கு உண்டு

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.
சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இலைகள் பல நோய்களை விரட்டும் திறன் கொண்டது.
இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என முழுத்தாவரமும் பயன்படுபவை.

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம்.
நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும்.

சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம்.

தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம்.

இந்த இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.

இந்த நொச்சி பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.

நொச்சி துவையல்
முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு போட்டு நொச்சி இலையை லேசாக வறுக்கவும்.
பிறகு இதனுடன் வெற்றிலை மிளகு மற்றும் மிளகாய் செடியின் இலையை அரைத்தால், நொச்சி இலை துவையல் ரெடி.
பயன்கள்
இந்த துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமடையும்.
இதை முதுகில் பூசிக்கொண்டால், முதுகு வலி பறந்துவிடும்.
மேலும் சுவாஸ கோளாருகள் நீங்கி நல்ல அரோக்கியத்துடன் இருக்கலாம்.

நொச்சி கஷாயம்
நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் வாணலியல் வைத்து சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் நொச்சி கஷாயம் ரெடி.
பயன்கள்
இந்த கஷாயம் மலேரியா நோயை விரட்டும் சக்தி வாய்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe