
கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள் என்று ஆபிரகாமிய மதத்திற்கு மாறியவர்களும், பெரியாரிச வாதிகளும் தொடர்ந்து பேசியதால் அதில் ஒருவர் அதை நம்பி கேட்டிருந்தார்!
அவருக்கான கொஞ்சம் பெரிய (முடிந்தளவு குறைத்த) பதில்:
என்னவோ பக்கத்திலிருந்து பார்த்தமாதிரி பேசறீங்க!?அப்படி உங்களை மூளைச்சலவை செய்துவிட்டார்கள். சரி வாங்க, கொஞ்சம் பேசுவோம். இப்ப ஒரு பக்கம் நம்ம முன்னோர்கள் – மறுபக்கம் பிராமணர்கள் அப்படின்னு உங்க நம்பிக்கைபடியே வச்சிக்குவோம்.
அதாவது நம் முன்னோர்கள் இங்கிருந்தவர்கள், பிராமணர் கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்தார்கள். இங்கிருந்த நம் முன்னோர் கள் கல்வி அறிவு பெற்றிருந்தவர்களா அல்லது காட்டுமிராண்டிகளா?

ஏற்கனவே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தவர்களை வெளியிலிருந்து ஆடு மாடு மேய்த்துக்கொண்டு வந்தவர்கள் இதுதான் மனுதர்மம், இதன் படி நீங்களெல்லாம் சூத்திரர்கள் என்று சொல்லியிருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பார்களா? ஏற்கனவே கல்வி அறிவோடு இருந்தவர்கள், அதைக்கேட்டு தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்ப மறுத்துவிட்டார்களா?
ஏற்கனவே கல்வி கற்று, கலாச்சாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்திருந்தால், ஆடு மாடு மேய்த்துக் கொண்டு வந்தவர்களை அடிமைகளாக்கி வேலைக்கு வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள். அப்படி நம் முன்னோர்கள் கல்வி கலாச்சாரம் தெரியாத காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால், வெளியில் இருந்து வந்த பிராமணர்கள் அப்போதே கல்வி அறிவோடும், கலாச்சார சிறப்பும் பெற்றிருந்தார்களா?
அப்படி நம் முன்னோர்கள் இருந்து, வந்தவர்கள் சிறந்திருந்து, நம்மை கல்வி கற்கவிடாமல் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இங்கு வந்தவர்கள் பிராமணர்கள் மட்டுமென்றால், அவர்கள் வந்துதான் சாதிய பாகுபாட்டை ஏற்படுத்தியிருந்தால், அதற்கு முன் இங்கிருந்த நம் முன்னோர்கள் ஒற்றுமையாக இருந்தார்களா?
அப்படி ஒற்றுமையாக இருந்தவர்களை எப்படி சாதிகளாக பிரித்தார்கள்? செய்யும் தொழிலை வைத்தா? அப்போது பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் செய்யும் தொழிலை வைத்துத்தான் சாதி தோன்றியதா? அப்போது பிராமணர்களைத்தவிர யாருமே கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லையா அல்லது சில சாதிகள் கற்கலாம் சில சாதிகள் கற்கக்கூடாது என்று சொன்னார்களா?
அப்படி சொல்லும்போது, அவற்றை அனைவரும் ஒத்துக்கொண்டார்களா? வெறும் பிராமணர்கள் மட்டும்தான் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டிருந்தால், திருவள்ளுவர் பிராமணரா?

சங்க இலக்கியங்களையும், புறநானூற்று பாடல்களையும் எழுதிய அனைத்து புலவர்களும் பிராமணர்களா? அப்போது பிராமணர்கள் தவிர வேறு சாதியினர் வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டதா?
வெள்ளையர்கள் பிராமணர்களை எதிர்த்தார்களா? அதுவரை பிராமணர்களுக்கு மட்டுமே இருந்த கல்வி அறிவு எப்படி மற்றவர்களுக்கு வந்தது?! இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். நேர்மையாக யாராலும் பதில் சொல்ல இயலாது. ஏனென்றால், ஆரிய வருகை என்பது கட்டுக்கதை. மனிதர்களின் நகர்வு, முதலில் தோன்றிய ஆப்பிரிக்கா விலிருந்து உலகம் முழுமைக்கும் நடந்தது.
அதில் பல்வேறு குழுக்களாக நகர்ந்து நகர்ந்து, மனிதர்களின் உருவமும் உணவு பழக்கங்களும் அந்தந்த தட்பவெட்ப நிலைக்கேற்ப மாறிக் கொண்டே வந்தது. குளிர் பிரதேசங்களில் வசித்தவர்களின் நிறம் வெளுத்து, மூக்கு குறுகி (குளிர் காற்றை நிறைய மூச்சிழுக்காமல் இருக்க) கண்கள் நிறம் மாறி, உயரம் கூடி குறைந்தது.
வெயில் பிரதேசங்களில் வசித்தவர்கள் உடல் கறுத்து, மூக்கு அகண்டு (சூடுதனிக்க நிறைய காற்றை இழுக்க வேண்டியதால்), கண்களும் கறுத்து, உயரம் மிதமாக இருந்தது. அப்படி அங்கங்கே இருந்த இனக்குழுக்களுக்குள் போர், இனக்கலப்பு என்று முன்னேறி முன்னேறி உயர்வாக தெரிந்ததை அடுத்தவரும் பின்பற்றி வளரத்தொடங்கியது மனித நாகரிகம்.
இந்தியா என்ற நிலப்பரப்பு, நிறைய ஆற்றுப்படுகைகளால் வளம் நிறைந்திருந்து, வண்டல்களில் பயிர்கள் பெருகி உணவுத்தேவை பிரச்சினையாக இல்லாமல் இருந்தது. ஆனால் பாலைவனத்தில் வசித்தவர்களும், பனி பிரதேசத்தில் வசித்தவர்களும், உணவு என்பதையே பெரும் சவாலாக பார்த்தார்கள்.
சிலபேர் சொல்வதுபோல் இந்தியா எந்த காலத்திலும் ஏழை நாடாகவோ, உணவுக்கு ஒரு சாரார் சிரமப்பட்டோ எப்போதும் இருந்ததில்லை. உலகில் பெரும்பணக்கார நாடாக இந்திய நிலப்பரப்பு இருந்தது. உணவுப் பிரச்சினை இல்லாததால் கலையும், கலாச்சாரமும், இலக்கியமும் வளர்ந்தது.
பாரசீக பாலைவனப் பிரதேசத்திலிருந்தும், ஐரோப்பிய பனிப்பிரதேசங்களிலிருந்தும் இங்கு கொள்ளை அடிக்க வருவதற்கு முன்பு வரை இதுதான் நிலை. இங்கு சிறு சிறு நாடுகளாக இருந்தவற்றிற்குள் எல்லைகளை விரிவாக்க போர்கள் நடந்துகொண்டே இருந்தது.
அதில் வென்றவர்கள் போர் கைதிகளைக்கூட குளம் வாய்க்கால் ஏரி வெட்டவும், கோயில் மற்றும் கோட்டைகள் கட்டவுமே பயன்படுத்திக்கொண்டார்கள். என்றுமே அடிமையாக நடத்தியதில்லை. அடிமைகளை வாங்கி விற்கும் சந்தைகளும் நடைமுறை களும் மத்திய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் மிகப்பிரபலமாக இருந்ததை வரலாற்றில் படிக்கலாம்.
ஆகவே சாதி ஏற்றத்தாழ்வுகளும், ஆண்டான் அடிமைத் தனமும், உணவில்லாத ஏழைகள் வருந்துவதும் இந்த வெளியாட்கள் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும்வரை இங்கு இல்லவே இல்லை.
உங்களை தாழ்வு மனப்பான்மையில் உழல வைத்து முன்னேற விடாமல் செய்யவே, உழைத்தால் நீங்கள் முன்னேறலாம் என்று ஊக்குவிக்காமல், வேறு யாராலோ நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்று சுயபச்சாதாபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- வாட்ஸ்அப் வழி பகிரல்



