குழந்தைங்க விரும்பும் பனீர் ஆலு போண்டா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
ponda

பனீர் – ஆலு போண்டா

தேவையானவை:
கடலை மாவு – 150 கிராம்,
அரிசி மாவு – 25 கிராம்,
மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – கால் கிலோ.

ஸ்டஃப்பிங் செய்ய:
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து மசிக்க வும்) , பனீர் துண்டுகள் – 50 கிராம்,
பொடித்த மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
நறுக்கியகொத்தமல்லித்தழை, – சிறிதளவு
பச்சை மிளகாய் – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:
ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும். தயார் செய்து வைத்த உருண்டை களை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.