பாஸ்போர்ட்க்கு இனி டிஜிட்டல் ஆவணம்! மத்திய அரசு அதிரடி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
pass-port-1
pass-port-1

இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்கள் சொந்த நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் என்பது மிகவும் அவசியம். ஆனால் அதனைப் பெறுவது சுலபமல்ல. அவற்றிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் அனைத்தும் சரி பார்த்து உறுதி செய்யப்பட்ட பிறகுதான் பாஸ்போர்ட் நமது கைக்கு வரும்.

இந்நிலையில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை காகிதமில்லா முறையில் டிஜிட்டல் ஆவணங்களாக நாட்டு மக்கள் சமர்ப்பிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.