ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்!

சற்றுமுன் தமிழகம்
train 2 - 2026

சென்னை எழும்பூரில் இருந்து, மதுரைக்கு இயக்க வேண்டிய வைகை; காரைக்குடிக்கு இயக்க வேண்டிய பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும், 14ம் தேதியில் இருந்து, 21ம் தேதி வரை, நிலையம் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், வரும் 20ம் தேதி, முத்துநகர், கொல்லம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள்; செங்கோட்டை, ராக்போர்ட், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்; செங்கல்பட்டிலிருந்து இயக்கப்பட உள்ளன.

திருச்சி, திருச்செந்துார் மற்றும், ராமேஸ்வரத்துக்கு செல்லும் ரயில்கள், 21ம் தேதி செங்கல்பட்டிலிருந்து புறப்பட உள்ளன.

செங்கோட்டைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், 20 மற்றும், 21ம் தேதிகளில், செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கும், தாம்பரத்தில் இருந்து, செகந்திரபாத்துக்கும் வரும், 20 மற்றும், 21ம் தேதிகளில், இயக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள், நிலையம் மாற்றி சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து, கேரளா மாநிலம் குருவாயூருக்கு வரும், 21ம் தேதி இயக்க வேண்டிய சிறப்பு ரயில், நிலையம் மாற்றப்பட்டு, விழுப்புரம் நிலையத்தில் இருந்து, குருவாயூருக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.