காருக்குள் கசமுசா! காவலரிடம் மாட்டிய காதல் ஜோடி!

உலகம் சற்றுமுன்
car kasamusa - 2026

லாக்டவுன் சமயத்தில், ஒருவரையொருவர் பார்த்து கொள்ள முடியாமல் தவித்த காதலர்கள் பொறுமை இல்லாமல் பல புதிய முயற்சிகளை செய்து வருகின்றனர் அப்படி செய்த ஜோடிக்கு போலீஸ் பெரிய ஆப்பை வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ளது அதிலும் குறிப்பாக இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 2வது அலை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருசில தளர்வுகள் நீக்கப்பட்டு, மீண்டும் கட்டுபாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வர முடிந்த அரசுக்கு காதலர்களை மட்டும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

இப்போது எல்லாம் முன்புபோல காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ள முடியாததால் ரகசியமாக சந்தித்து எல்லையும் மீறிவிடுகின்றனர்.

அப்படித்தான் ஒரு இளம் ஜோடி வசமாக மாட்டி கொண்டுள்ளனர் காதலர்கள் 2 பேரும் இங்கிலாந்தின் டெர்பி பகுதியில், நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து யாருக்கும் தெரியாமல் காருக்குள்ளிருந்தே பேசியுள்ளனர். ஆனால் ஒருகட்டத்தில் திடீரென உடலுறவில் ஈடுபட்டுவிட்டனர், இதை அந்த வழியாக சென்ற போலீஸார் பார்த்துவிட்டு, ஷாக் ஆகியுள்ளனர்.

இப்படி பொதுவெளியில் காருக்குள், கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 2 பேருக்கும் தலா 200 டாலர்கள் என 400 டாலர்களை அபராதமாக விதித்து 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர். மேலும், பலர் எங்கள் நாட்டிலும் இது போன்ற தண்டனை கொடுங்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டுழியம் தாங்க முடியவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.