இத மாதிரி சுவ இல்லவேயில்ல.. இனிப்பு தக்காளி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Sweet tomatoes - 2026

இனிப்பு தக்காளி
தேவையான பொருட்கள்
ஆப்பிள் தக்காளி – 5
சர்க்கரை – அரை கப்
பட்டை – ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் – 2
முந்திரி – 10
சீட்லஸ் திராட்சைப்பழம் – 15
ஆப்பிள் – பாதி பழம்
செய்முறை
தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய் தாளித்து மசித்த தக்காளியை போட்டு வதக்கவும்.

அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
தக்காளியில் பச்சை வாசனை போனதும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து ஓரளவு திக் ஆனதும் இறக்கவும்.
இந்த கூழ் ஆறியதும் நெய்யில் வறுத்த முந்திரி, நறுக்கிய ஆப்பிள், திராட்சை சேர்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.