காற்றில் பறக்கும் திமுக வாக்குறுதிகள்.. கடமை மறந்து வாய்மூடி இருக்கும் ஊடகம்! வெளுத்து வாங்கிய Dr. கிருஷ்ணசாமி!

தமிழகம்
krishnasamy dr
krishnasamy dr

தி.மு.க பதவியேற்றதிலிருந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஸ்டாலினை பார்த்து ஊடகங்கள் கேள்வி கேட்காதது ஏன்?” என புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எடப்பாடி அரசை அடிமை அரசு என்றும் அடிமை அரசு பதவி விலக வேண்டும் என்று சொன்னார்கள்.

தி.மு.க பதவியேற்றதிலிருந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஸ்டாலினை பார்த்து ஊடகங்கள் கேள்வி கேட்காதது ஏன்?

12ம் தேதி நீட் தேர்வு இருக்கும்போது 9ம் தேதி சட்டபேரவையை கூட்டி எதற்கு தீர்மானம் போட வேண்டும். இதுகுறித்து தி.மு.க ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்காதது ஏன்?

தேர்தலுக்கு முன் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன” என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.