காதல் திருமணம்.. கொலை மிரட்டல் விடுத்த பெண்வீட்டார்! காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
love jodi 2 - 2026

ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் வீட்டார் கொலை மிரட்டலை அடுத்து காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த சிறுகரும்பூர் சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வினோத்(23) மூபின்தாஜ்(23). இவர்கள் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் திருமணம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவருவது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனையடுத்து வினோத் மற்றும் மூபிந்தாஜ் ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி அரக்கோணம் அடுத்த சைனபுரம் பகுதியில் உள்ள இந்து கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் இவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த இருவரும் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக் கூறி தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் உரிய நடவடிக்கை எடுக்க காவேரிபாக்கம் காவல் நிலையத்திற்கு உத்தரவலித்ததன்பேரில் காதல் ஜோடி காவேரிபாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக பத்திரமாக கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.