centralbudget - 2026

சிறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.

அப்போது அவர்…

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும்.

இந்தப் பணம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.75,000 கோடி கூடுதல் செலவாகும்.

இந்த நிதி வழங்கப் படுவதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும்./.. என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending