
கோவிலைத் திற என்று ஆலயங்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நெல்லை மாநகர் மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் நடைபெற்றது.
நெல்லை டவுண் சந்திவிநாயகர் திருக்கோவில் முன்பு நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையில், இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிவா , சுடலை , செல்வராஜ் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். மேலும், இந்துமுன்னணி மாவட்ட துணைத் தலைவர் சங்கர், இந்துமுன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நமச்சிவாயம் , ராஜசெல்வம் , துரைராஜ் , இசக்கி ராஜ் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்து முன்னணி மாநில பேச்சாளர் காந்திமதிநாதன், பாலாஜி கிருஷ்ணசாமி (பிஜேபி வக்கீல் அணி மாநில செயலாளர்), டி.வி.சுரேஷ் (பிஜேபி மாவட்ட துணை தலைவர்), சுப்பிரமணியன் (பக்தர் பேரவை மாவட்டச் செயலாளர்) குணசீலன் (பக்தர் பேரவை மாவட்ட அமைப்பாளர்) பரமசிவன் (பக்தர் பேரவை மாவட்ட தலைவர்) அம்பலவாணன் (நெல்லை மண்டல இந்து முன்னணி தலைவர்), ரமேஷ் கண்ணன் (பாளை ஒன்றிய இந்து முன்னணி செயலாளர்),
மோகன் (மானூர் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர்), மாரியம்மாள் , அருள்ராஜ் , குருசுவாமி , காந்தி , முத்துராமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!