அஜித் படத்தின் ரீலிஸ் உரிமையை அலேக்காக வாங்கிய நிறுவனம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
valimai
valimai

நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் ‘வலிமை’. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவரில்லை ஜோடியாக ‘காலா’ பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர்.

அதன் பிறகு பல நாட்கள் இழுத்தடித்த போனிகபூர், அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார்.

தல பிறந்தநாளில் டபுள் ட்ரீட் கிடைக்க உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மற்றொரு ஸ்பெஷல் நியூஸ் வெளியாகியுள்ளது.

அதாவது தல அஜித்தின் வலிமை பட தியேட்டர் ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அஜித் பட வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கோடிகளைக் கொட்டிக்கொடுத்து வலிமை தியேட்டர் ரிலீஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.