காவலர் வீட்டிலே ஏசியைப் போட்டு உறங்கிய திருடன்! காலையில் சுற்றி வளைத்த போலீஸ்!

உலகம் சற்றுமுன்
robbery
robbery

தாய்லாந்து நாட்டில் திருடச் சென்ற இளைஞர் செய்துள்ள காரியத்தை பார்த்து காவலர் அதிர்ச்சி அடைந்தனர்.

தாய்லாந்து நாட்டில் அதித்கின் குந்துத் (22)என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள வீடுகளில் உரிமையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கு இருக்கும் பொருள்களைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

அவர் வழக்கம் போலவே விசியான் பூரி ஜியாம் ப்ரசெர்ட்டின் மாவட்ட காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார். ஆனால் அங்கு ஏசி ரிமோட்டை பார்த்ததும் நகராமல் அந்த வீட்டின் உரிமையாளர் காலையில் எழுந்து இருப்பதற்கு முன்னதாக நாம் எழுந்து சென்று விடலாம் என்று நினைத்து அங்கேயே உறங்கியுள்ளார்.

இந்நிலையில் காலையில் எழுந்து வந்து பார்த்த வீட்டின் உரிமையாளரான காவல் அதிகாரி தன் மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏசி ஓடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் பிறகு தன் மகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்து உடனே காவல் அதிகாரி மற்றும் மற்ற காவலர்களுக்கு தகவல் அளித்து அங்கு வரவழைத்தார்.

அந்த திருட வந்த நபர் சத்தம் கேட்ட உடனே எழுந்து சுற்றியும் பார்த்துள்ளார்‌ அதன் பிறகுதான் தான் காவல்துறை அதிகாரியின் வீட்டிற்கு திருட வந்தோம் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் காவல் அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.