சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த பேஷன் ஷோவில் பெண்களுக்கு பதில் ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது.
பார்வையாளர்களுக்கு பேய்ப்படங்களில் காலில்லாதா, தலையில்லாமல் பேய் நகர்வதை காண்பிக்க ஆடைகள் மட்டுமே நகர்வதை காட்டுவார்களே, அப்போது அதை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வே அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் கேலி கிண்டலாக விமர்சிக்கப்படும் இந்த நவீன ஆடையலங்கார அணிவகுப்பு பற்றிய செய்திகள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
மறுபுறத்திலோ, ஆடைகளை அணிந்து நடைபயிலும் உரிமைகூட செளதி அரேபியா பெண்களுக்கு கிடையாது என்று பலரும் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.



