உதயநிதியின் அடுத்த படம் டிராப்?

Published:

udhayanidhi1 - 2026

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் அட்லி உதவியாளர் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் ப்ரியா பவானிசங்கர், இந்துஜா ஆகியோர் நடிப்பில் அட்லி உதவியாளர் எனாக் என்பாவ்ர் இயக்கும் காதல் மற்றும் காமெடி படம் ஒன்றின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. ஆனால் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது

udhaya - 2026ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது இந்த படம் டிராப் ஆகவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனம் மட்டும் மாற்றப்படவுள்ளதாகவும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு உள்பட அனைத்தும் தயாராக இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறினர்

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img