நடிகர்களாக மாறும் இரண்டு இசையமைப்பாளர்கள்

சினி நியூஸ் சினிமா

d.imman1 - 2026

ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கோலிவுட் திரையுலகில் ஹீரோவாகி மாறி வெற்றியும் பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபல இசையமைப்பாளர்கள் நடிக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் டி.இமான் ஆகியோர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய இருவரும் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆகவிருப்பதாகவும் இதற்காகவே இருவரும் கட்ந்த சில நாட்களாக தங்கள் உடல் எடையை குறைத்து வருவதாகவும் தெரிகிறது. குறிப்பாக டி.இமான் குண்டாக இருந்ததில் இருந்து நடிப்பதற்கான உடல்வாகுக்கு தன்னை கொண்டு வந்துள்ளார்.

devisri - 2026இயக்குனர் எழில் இயக்கவுள்ள அடுத்த படத்தில் டி.இமான் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக செய்தி வருகிறது. இயக்குனர் எழில் இப்போது விஷ்ணு விஷாலை வைத்து `ஜகஜால கில்லாடி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் டி.இமான் நடிக்கவுள்ள படத்தை அவர் தொடங்கலாம். அதேபோல் தேவிஸ்ரீபிரசாத், சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் அவரே ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.