தம்பிராமையா இசையில் பாடிய அஜித் பட இசையமைப்பாளர்

சினி நியூஸ் சினிமா

maniyar kudumbam1 - 2026

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் படம் ‘மணியார் குடும்பம். இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் பொறுப்புகளையும் ஏற்றுள்ள தம்பி ராமய்யா முதல்முறையாக இந்த படத்தில் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். இவரது இசையில் ஒரு பாடியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் டி.இமான்

இதுகுறித்து தம்பிராமையா கூறியதாவது: இந்த வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில், ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவள் வந்த பின், அவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? என்பதே கதை.

thambi ramaiyaa - 2026என் மகன் உமாபதி நடித்துள்ள 2-வது படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக, 5 மாதங்களாக நான் நடிக்கவில்லை. இதில், உமாபதி ஜோடியாக கேரளாவை சேர்ந்த மிருதுளா மேரி நடித்து இருக்கிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராதாரவி, ஜெயப்பிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

என் இசையில், டி.இமான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். “என் மனசுக்குள்ள நீ புகுந்து…” என்று தொடங்கும் அந்த பாடலை ரூ.40 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படமாக்கியிருக்கிறோம். சென்னை, புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. தந்தை-மகன் இடையேயான பாசப் பிணைப்பை சொல்லும் படம், இது. இதில் நானும், உமாபதியும் தந்தை-மகனாகவே நடித்து இருக்கிறோம்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்த படத்தை எல்லோரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், `யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.’ இவ்வாறு தம்பி ராமையா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.