
நடிகைகள் தங்களுடைய வித்தியாசமான புகைப்படங்கள், வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் பிரபல நடிகை இஷா தல்வார் தான் வீட்டு வேலை செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிவா நடித்த தில்லுமுல்லு’ உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருபவர் இஷா தல்வார். இவர் சமீபத்தில் திரையுலகினர் இடையே ஆரம்பித்த பிட்னெஸ் சேலஞ்சில் தானாக வலிய கலந்து கொண்டு வீட்டு வேலை செய்வதன் மூலம் தான் உடலை பிட்னெஸ் ஆக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது வீட்டை துணியால் துடைப்பது போன்ற வீடியோவை இவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமீர்கான் உள்பட பல பிரல நட்சத்திரங்கள் பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



