விஜய் டிவி பாவனா தற்போது வித்தியாசமாக புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர். இவர் முதன் முதலில் ஆர்ஜே-வாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் ஒரு தொகுப்பாளினியாக சேர்ந்த முதல் தொலைக்காட்சி ராஜ் டிவி. பீச் கேர்ள்ஸ் ஷோ என்ற நிகழ்ச்சி தான் அவர் தொகுத்து வழங்கிய முதல் ஷோ. பின்னர், அவர் ஸ்டார் விஜய் சேனலில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.
பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்களுக்கு தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அவர், கடந்த 2017 ஆம் ஆண்டில், விளையாட்டு பத்திரிகையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்தார். அங்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் புரோ கபடி லீக் ஆகியவற்றின் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கினார்.
அவர் 2018 ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இரண்டு பெண் வழங்குநர்களில் ஒருவராக இருந்தார்.
மேலும், சிறப்பாக பணியாற்றி வருவதால் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அன்றிலிருந்து இப்போது வரை இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷ் என்பவரை மணந்து தற்போது மும்பையில் வசித்து வருகிறார். ஆங்கரிங்கில் எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவுக்கு பாட்டு பாடுவதிலும், நடனமாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் பாவனா.
மேலும், தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா, அடிக்கடி தனது நடனமாடும் வீடியோ, பாடல் பாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.
அதிலும் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம். அந்த வகையில், இவர் தற்போது வித்தியாசமாக புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாவனா வெளியிடும் புகைப்படங்கள் அதிகம் ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டு வருவது வழக்கம். அ
திலும் இவர் இசையமைப்பாளர் அனிருத் போல இருப்பதாகவே ரசிகர்கள் மத்தியில் அதிக கிண்டலடிக்கப்பட்டு வந்தார். இருப்பினும் மனம் தளராத பாவனா விமர்சனங்களை நெகட்டிவாக எடுத்துக்கொள்ளலாம் எப்போதும் திடமான மனதுடன் பாசிட்டிவாக இருப்பது பாராட்டத்தக்கது.