
நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருக்கிறது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் இருந்து வேற மாறி பாடல் மற்றும் கிலிம்ப்ஸ் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.
மேலும் ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, ராஜ் ஐயப்பா, புகழ், அச்சுயுந்த் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ராஜ் ஐயப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேடஸை பகிர்ந்துள்ளார். அதனை நடிகர் அஜித்தின் அனுமதியுடன் பகிர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ”ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் ஆகியவை ஒருவரின் பொருளாதார நிலை. அவரது குணம் கிடையாது. நல்லவர் மற்றும் கெட்டவர் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள்.

ஒருவருடைய பொருளாதார நிலையை வைத்து அவரது குணத்தை முடிவு செய்யாதீர்கள். எல்லோரும் விழித்துக்கொள்ளுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.