22 May 22 kumara samy - 2026

கர்நாடக மாநிலத்தில் ‘காலா’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையில் அரசு தலையிடாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தை திரையிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளாது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டாலும் ‘காலா’ படம் கர்நாடகாவில் வெளியாக வாய்ப்பு குறைவே என்று கூறப்படுகிறது.

kaala single song - 2026இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு எந்த முடிவு எடுக்கவில்லை. மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது. மேலும் ‘காலா’ படம் திரையிடுவதில் கன்னடர்களுக்கு விருப்பமில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த கருத்தை அடுத்து கர்நாடகாவில் ‘காலா’ வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த படம் கர்நாடகாவில் சுமார் ரூ.20 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending