
ஹரீஸ் கல்யாண் தமிழ் சினிமாவில் மிக முக்கியமாக வளர்ந்து வருகிறார். இவர் தொடர்ந்து நடித்து வரும் படங்கள் ரசிகர்களால் கொண்டாடபட்டு வருகிறது.
நடிகர் ஹரீஸ் கல்யாண் அடுத்ததாக தாராள பிரபு படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் சில பாடல்கள் வெளியிடபட்ட நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துள்ளது. இதில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவுத்துள்ளது. படம் வரும் மார்ச் 13 வெளியாகிறது.

தாராள பிரபு படம் விக்கி டோனர் எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காகும். இதை தமிழுக்கு ஏற்றார்போல சிறப்பாக எழுதியதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாக விழாவின் போது ஹரீஸ் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார் .
மேலும் ஸ்பெரம் டோனர் படம் என்பதனால் தவறான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று யாரும் பயந்து விட வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப படம் என்று கூறியுள்ளார் ஹரீஸ் கல்யாண். தமிழுக்காக நிறைய மாறுதல்களை கொடுத்து எடுத்திருப்பதாகவும் கூறினார். மேலும் படம் செமயா வந்து இருக்கு என்றார்.

இந்த படத்தில் பத்மஶ்ரீ விவேக் நடித்திருக்கிறார். இவர் படத்தின் போது பல காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை ஹரீஸ் கல்யாணுக்கு கற்று தந்தாராம். மேலும் பேசிய ஹரீஸ் கல்யாண், விவேக்கிடம் பல நேரங்களில் ரஜினி ஸ்டைலை பார்த்தேன் அவர் ரஜினிபோல பல இடங்களில் நடிப்பார் என்று கூறினார்.
இந்த படத்தில் முதல்முறையாக 8 இசையமைப்பாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இது இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்துவின் முயற்சியாம் இந்த படமே ஒரு இசை தேவை உள்ள படம் என்பதால் இப்படி ஒரு முயற்சியை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது என்று படக்குழுவால் கூறப்பட்டது.
இறுதியாக பேசி முடிக்கும் போது மேடையில் பெருமூச்சு விட்டு நெஞ்சில் கைவைத்து சிரித்தார் ஹரீஸ் கல்யாண். இது ஒரு சிலிர்க்க வைத்த நிகழ்வாக பலரால் பார்க்கபட்டது. ஹரீஸ் கல்யாண் பத்திரிக்கையாளர்களிடம் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் நீங்கள் நினைத்தால் முடியும் என்று வேண்டுகொள் விடுத்து சென்றார். தாராள பிரபு படம் வரும் மார்ச் 13 வெளியாகுகிறது



