பிரபல பிரவசனகர்த்தா மல்லாதி சந்திரசேகர சாஸ்திரி காலமானார்!

Published:

malladi chandrasekara sasthri1 - 2026

மல்லாதி சந்திரசேகர சாஸ்திரி : பிரபல பிரவசனகர்த்தா மல்லாதி சந்திரசேகர சாஸ்திரி சற்று முன்னர் காலமானார்.  அவருக்கு வயது 96.  இன்று மாலை ஹைதராபாத்தில் தம் இல்லத்தில் சிவ ஐக்கியம் அடைந்தார்.

இவர் மல்லாதி தட்சிணாமூர்த்தி தம்பதியருக்கு 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்தார்.  மல்லாதி குடும்பம் அமராவதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வேதக் கல்வியிலும் சனாதன சம்பிரதாயத்திலும் சிறப்பான புகழோடு விளங்கியது. சிறுவயதில் சந்திரசேகர சாஸ்திரி தன் தாத்தா மல்லாதி ராமகிருஷ்ணரிடம் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழி இலக்கியங்களைக் கற்றார். 

மல்லாதி சந்திரசேகர சாஸ்திரி தன் பதினைந்தாம் வயதிலிருந்தே புராண பிரவசன யக்ஞம் செய்யத் தொடங்கினார். ஹரிகதை, நாடகம் புராணம், இதிகாசம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கேட்போரைக் கவரும் விதத்தில் பிரவசம் செய்வது இவருடைய தனிச் சிறப்பு.

இவருடைய நீண்ட உபன்யாசப் பயணத்தில் பலப்பல பிரமுகர்கள் பல முக்கியமான அமைப்புகள் இவருக்கு சன்மானங்களும் விருதுகளும் அளித்துப் பெருமை கொண்டன. புராண வாசஸ்பதி விருது பெற்றுள்ளார். வேதத்திலும் அஷ்டாதச புராணங்களிலும் அதிகாரப்பூர்வமான நிபுணராக மக்களால் ஏற்கப்பட்டார்.

malladi chandrasekara sasthri - 2026

அதில் முக்கியமாக திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்திற்கு நேர்முக வர்ணனை செய்பவராக பாலாஜி கல்யாண வைபவத்தை பக்தர்களின் கண் முன் கொணர்ந்து அபிநவ வியாச விருது கிடக்கப் பெற்றார். பத்ராசலம் சீதாராம கல்யாண பிரம்மோற்சவத்தில் இவருடைய பிரவசம் தனிச் சிறப்பாக பக்தர்களால் ஏற்கப்படும்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அகில இந்திய வானொலி, தொலைக்காட்சிகளில் எண்ணற்ற ப்ரவசனங்கள் செய்துள்ளார். தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர். பல ஆண்டுகள் தர்ம சந்தேகங்களைத் தீர்த்து தர்ம சூட்சுமங்களை ஆத்திகர்களுக்கு விளக்கியுள்ளார்.

உகாதி பஞ்சாங்க ஸ்ரவணம், சதுர் வேதங்கள், புராண, இதிகாசங்களை சாஸ்திர ரீதியில் பிரவசனம் செய்து ஆத்திகர்களுக்கு தர்ம மார்கத்தை காட்டிய உபய வேதாந்த பண்டிதர் மல்லாதி சந்திர சேகர சாஸ்த்ரி.

மறைந்த முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி யின் ஆட்சியில் மல்லாதி சந்திரசேகர சாஸ்த்ரி பஞ்சாங்க சரவணம் செய்தார்.

– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img