மாணவியுடன் தனிமையில் இருந்த இளைஞன்! புகைப்படம் எடுத்து நண்பனோடு மிரட்டல்!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
cell 2 - 2026

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்த தினேஷ் எனும் நபர், இவர் 17 வயது கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி அந்த கல்லூரி மாணவியிடம் தனிமையில் இருந்ததாகவும், மேலும் மாணவியுடன் தனிமையில் இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கல்லூரி மாணவி தினேஷுனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

ஆனாலும் கல்லூரி மாணவியை விடாத தினேஷ், அந்த புகைப்படத்தை காண்பித்து அந்த மாணவியை மிரட்டியுள்ளான். மேலும் ரவி என்பவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பியதாகவும் தெரிகிறது.

இதனால் ரவி என்கிற நபரும் கல்லூரி மாணவியிடம் தவறான நோக்கத்துடன் பேச ஆரம்பித்துள்ளார். இதனிடையே மாணவி தரப்பு அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்தனர் தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.