கத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Hair removal - 2026

வயதான ஒருவர் ஷேவிங் மிஷின் இல்லாமல், குச்சியையும், நூலையும் கொண்டு அழகாக ஷேவிங் செய்யும் வீடியோ நெட்டிசன்களிடையே வைரலாகி உள்ளது.

ஷேவிங் மிஷின் இல்லாமல் எப்படி ஷேவிங் செய்வது என்பதை வயதான ஒருவர் செய்து காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில், வயதான மனிதர் ஒருவர் ஷேவிங் செய்து கொண்டிருப்பதை காணலாம்.

ஆனால் அவர் கையில் ஷேவிங் செய்ய ரேசர் இல்லை. அதற்கு பதிலாக குச்சிகள் மற்றும் நூலை கொண்டு ரேசர் போன்ற கருவியை தானாகவே அவர் தயார் செய்திருக்கிறார்.

இரு சிறிய குச்சிகளை கொண்டு ‘வி’ வடிவில் இணைத்து ரேசரை அவர் உருவாக்கி இருக்கிறார். குச்சி இணைக்காமல் இருக்கும் பக்கத்தில், நூலை பல அடுக்குகளாக அடுக்கி, பிளேடு போல் தயார் செய்திருக்கிறார்.

இதனை கொண்டு அவர் ஷேவிங் செய்ய, அது நெட்டிசன்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளேடு இல்லாமல், நூலை கொண்டு அவர் ஷேவிங் செய்யும் உத்தியை கண்டு, ஆச்சரியம் தான் ஏற்படுகிறது.

https://youtu.be/rxoIEH-RxQ0

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.